ETV Bharat / state

பொன்னமராவதி பிரச்னை: காரைக்குடியில் சாலை மறியல் - புதுக்கோட்டை

சிவகங்கை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு தரப்புப் பெண்களை வாட்ஸ்அப்பில் இழிவாக பேசியவர்களைக் கண்டித்து, காரைக்குடியில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
author img

By

Published : Apr 20, 2019, 3:45 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு தரப்புப் பெண்களை இழிவாகப் பேசி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியாகியது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது குறித்து சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரத்தைக் கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும் காரைக்குடி அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லவைத்தனர். இப்போராட்டத்தால், அப்பகுதியில் இயங்கும் கடைகள் அடைக்கப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காரைக்குடி சாலை மறியல்

சிவகங்கை    ஆனந்த்
ஏப்ரல்.19

பொன்னமராவதி பிரச்சினை : காரைக்குடியில் சாலை மறியல்

சிவகங்கை: பொன்னமராவதியில் ஒரு சமூக பெண்களை இழிவாக வாட்ஸ்ஆப்பில் பேசியவர்களை கண்டித்து காரைக்குடியில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒருசமூக பெண்களை இழிவாக பேசியதாக வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியாகியது. இதனால்  அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதுகுறித்து சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெரியார்சிலை, கோட்டையூர்,
புதுவயல் அருகே பனம்பட்டியில் தங்களது சமுதாயம் பெண்கள் குறித்து வாட்ஷாப்பில் அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் கடைகள் அடைப்பட்டன. 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.