ETV Bharat / state

ராமநாதபுரத்தில் காவலர் தற்கொலை

ராமநாதபுரம்: ஆயுதப்படை குடியிருப்பில் வசித்த காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரத்தில் காவலர் தற்கொலை
ராமநாதபுரத்தில் காவலர் தற்கொலை
author img

By

Published : May 10, 2021, 5:30 PM IST

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தைச் சேர்ந்த தம்பதி அசோக்குமார் (27) - சித்ரா தேவி. இருவரும் கீழக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றினர். இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இத்தம்பதி ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்த நிலையில், இவர்களுக்குள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சித்ரா தேவி, குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சித்ரா தேவியுடன் அசோக்குமார் ஃபோனில் நேற்று (மே 9) இரவு பேசினார். இதற்கு சித்ரா தேவி மறுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, அசோக்குமார் ராமநாதபுரத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த கேணிக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அசோக்குமார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாநிலங்களுக்கு 9 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்’ - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.