ETV Bharat / state

இளைஞர் வெட்டி படுகொலை... கண்மாயில் தலையை தேடும் போலீஸ்; சிவகங்கையில் கொடூரம் - murder news

சிவகங்கை மானாமதுரை அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை உடலை கண்மாய் கரையில் வீசிவிட்டு தலையை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெட்டி படுகொலை
இளைஞர் வெட்டி படுகொலை
author img

By

Published : Dec 1, 2022, 4:32 PM IST

சிவகங்கை: மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்திவேல் என்பவரின் மகன் ராம் (24) என்ற இளைஞர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அலைபேசி மூலம் ராமுவை நண்பர் ஒருவர் அழைத்ததால், அருகே உள்ள இம்மநேந்தல் கண்மாய்க்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டை விட்டு சென்ற ராமு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால், ராமுவின் அண்ணன் கண்மாய்க்கு சென்றுள்ளார். அங்கு கண்மாய் கரை அருகே ராமு சென்ற ஸ்கூட்டி ரத்தக்கரையுடன் நின்றதை பார்த்த ராமுவின் அண்ணன், அருகில் இருந்த உறவினரிடம் கூறவே, அப்பகுதியில் இருந்த அனைவரும் வந்து கண்மாய் முழுவதும் தேடி உள்ளார்கள்.

அப்போது கண்மாய் அருகே ராமுவின் தலை இல்லாமல், உடல் மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை காவல்துறையினர், ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவகல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொல்லப்பட்ட ராமுவின் தலை இன்னும் கிடைக்காததால், இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் கண்மாய் தண்ணீரில் இறங்கி தலையை தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும், இதனை யார் செய்திகருக்ககூடும் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில சடலத்தில் தலை இல்லாமல் இருப்பதால், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவகல்லுரியில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இரவில் இருந்து சடலம் அரசு மருத்துவமனையின் வெளியே ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெட்டி படுகொலை கண்மாயில் தலையை தேடும் போலீஸ்

இதையும் படிங்க: ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.