ETV Bharat / state

‘இன்ஸ்டாகிராம் காதல் திருமணம்': காதலனோடு காதலியை அனுப்பி வைத்த காவலர்கள் - love married through Instagram

சிவகங்கை மாவட்டத்தில் ‘இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கமாகி திருமணம் செய்துகொண்ட இளம் பெண்னை அவரது கணவரோடு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டாகிராம் காதல் திருமணம்
இன்ஸ்டாகிராம் காதல் திருமணம்
author img

By

Published : Jan 26, 2022, 8:19 AM IST

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ். கோட்டையை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகள் நிவேதா(19). இவர் மதுரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். திடீரென கடந்த 22ஆம் தேதியன்று நிவேதா காணாமல் போயுள்ளார். உடனே அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த எஸ்.எஸ் கோட்டை காவல்துறையினர், நிவேதாவை தேடி வந்துள்ளனர். பின்னர், அவரின் செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்பை கண்காணித்த போது அந்த எண் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சென்ற காவல்துறையினர் நிவேதாவை மீட்டனர்.

மேலும் அவருடன் தங்கியிருந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சென்னை திருவாஞ்சேரி மாப்பேடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(23) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை விசாரணைக்காக எஸ்.எஸ். கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நிவேதா கல்லூரிக்கு செல்லும்போது ‘இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளம் மூலம் சென்னை வெற்றிவேலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கருதிய நிவேதா, வெற்றிவேலுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அங்கு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இருவருக்கும் திருமண வயது பூர்த்தி அடைந்த நிலையில், காவல்துறையினர், நிவேதாவை வெற்றிவேல் உடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: Padma awards 2022: பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண், சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.