ETV Bharat / state

மழை நீருடன் கலக்கும் கழிவு நீர் - நோய் பரவும் அச்சத்தில் நகர மக்கள்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நீர்த் தேக்கத்தில் கழிவு நீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை நீருடன் கலக்கும் கழிவு நீர்
மழை நீருடன் கலக்கும் கழிவு நீர்
author img

By

Published : Nov 9, 2021, 10:27 AM IST

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சாஸ்திரி நகர், ராமசாமி நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கி விடுகின்றது. அது மட்டுமின்றி கழிவுநீர் செல்ல வழியில்லாததால் மழை நீருடன் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.

மழை நீருடன் கலக்கும் கழிவு நீர்

அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே இச்சூழலை அறிந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் குறைகளைப் போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் தொடர் மழையினால் மூன்று பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.