ETV Bharat / state

பேருந்து நிலையத்தில், பெண்ணின் பர்ஸை திருடிய முதியவர்! - Purse

சிவகங்கை: பேருந்திற்காக காத்திருந்த பெண்ணின் பர்ஸை  முதியவர் ஒருவர் திடிச் சென்றது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில், பெண்ணின் பர்ஸை திருடிய முதியவர்!
author img

By

Published : Apr 25, 2019, 7:56 PM IST

Updated : Apr 25, 2019, 8:06 PM IST

சிவகங்கை பேருந்து நிலையமானது மிகவும் பிரதானமான பேருந்து நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மதுரைக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்தும் பகுதியில் தனியாக அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரிடம், அவர் பையில் வைத்திருந்த பர்ஸை முதியவர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

பேருந்த நிலையத்தில், பெண்ணின் பர்ஸை திருடிய முதியவர்!

இந்த சம்பவம் தொடர்பான காட்சி அங்கிருந்த கடை ஓன்றின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை    ஆனந்த்
ஏப்ரல்.25

பேருந்து நிலையத்தில் பெண்களிடம் தொடர் திருட்டு. முதியவர் திருடும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்களிடம் மணிபர்ஸ்களை மர்ம நபர் திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றுவந்த நிலையில் முதியவர் திருடும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை பேருந்து நிலையமானது மிகவும் பிரதானமான பேருந்து நிலையமாகவுள்ள நிலையில் இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தினசரி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேருந்து நிலையத்தில் தனியாக காத்திருக்கும் பெண் பயணிகளின் மணிபர்ஸ் மற்றும் செல்போன்கள் திருடுபோகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்ததுடன் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் அதிகளவில் குவிந்தவண்ணம் இருந்தன. 

இதனை தொடர்ந்து சிவகங்கை நகர் காவல்துறை சார்பில் பெண்களிடம் மணிபர்ஸ் மற்றும் செல்போன்களை திருடும் நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து நிறுத்தும் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முதியவர் ஒருவர், தனியாக அமர்ந்திருக்கும் பெண் பயணி ஒருவரின் பையில் இருந்த மணிபர்ஸ் திருடும் காட்சியானது பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு முதியவர் குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Apr 25, 2019, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.