பொள்ளாச்சியில் நான்கு பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தும், வீடியோ எடுத்தும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்குடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர கோரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.