ETV Bharat / state

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால்... கார்த்தி சிதம்பரம் பேட்டி - tamil latest news

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன், என அக்கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எம்பி கார்த்தி சிதம்பரம்
எம்பி கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : Nov 23, 2022, 7:00 AM IST

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சிவகங்கையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற எம்.பி கார்த்தி சிதம்பரம், அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அவர், ”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பதவியை வழங்கினால், சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்கு வழங்க கோரி பலமுறை கோரியுள்ளேன். வழங்கினால் திறம்பட செயல்படுவேன்.

எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி

சத்தியமூர்த்திபவன் சம்பவம் வருத்தம் தரக்கூடியது. விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை இருக்கும் என நம்பிக்கையுள்ளது. எனக்கு தலைவர் பதவி வழங்கினால் மூத்த தலைவர்களையும் அரவனைத்து செல்வேன், புதிய ரத்தங்களையும் உள்ளே கொண்டு வருவேன்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு இருக்கின்ற கூட்டணியிலேயே வலுவான கூட்டனி திமுக காங்கிரஸ் கூட்டனி. பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி அமோக வெற்றி பெறும்” என தெரிவித்தார். திமுக அமைச்சர்களின் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”அமைச்சர்களின் மாறுபட்ட கருத்திற்கு முதலமைச்சரே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக; நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.