சிவகங்கை: காரைக்குடிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச. 24) வருகை தந்தார். அப்பொழுது அவரை வரவேற்று நகர் முழுவதும் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு விருதுநகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் குத்தகை எடுத்திருந்தார்.
அதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரமலை என்பவர் கொடி கம்பம் நடுவதற்கு காரைக்குடிக்கு வந்தார். இரவு விழா முடிந்த பின் கொடி கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது வீரமலை அகற்றிய கொடி கம்பம் மேலே சென்ற மின் வயரில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரைக்குடி வடக்கு போலீசார் அவரது உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுவை ஒழிக்க 'பாமக 2.O' ஆரம்பம்: அன்புமணி ராமதாஸ்