ETV Bharat / state

கீழடி அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை: கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இன்று சிறிய அளவிலான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு
author img

By

Published : Aug 2, 2019, 10:03 PM IST

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறது. உலக தமிழர்களின் பார்வையில் மிக அழுத்தமாய் விழுந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்டங்கள் மத்திய தொல்லியல் துறையாலும் நான்காவது, ஐந்தாவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு தொழில்துறையும் செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சங்ககால கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்ட இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டன. அதற்குப் பிறகு மிக நீளமான செங்கல் சுவரும் ஏறக்குறைய இரண்டு மீட்டர் ஆழமுள்ள உறைக்கிணறும் கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு

இதற்கிடையே சின்னஞ்சிறு அளவிலான எலும்புத் துண்டுகள் தற்போது கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆய்வாளர்களிடம் கேட்டபோது, இது இங்கு வாழ்ந்த மக்கள் செல்லப்பிராணிகளாகவோ அல்லது அவர்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளின் எலும்புகளாகவோ இருக்கலாம் என்றனர். வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Intro:கீழடியில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இன்று சிறிய அளவிலான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன

Body:தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறது

உலக தமிழர்களின் பார்வையில் மிக அழுத்தமாய் விழுந்துள்ள கீழடி அகழாய்வு முதல் மூன்று கட்டங்கள் மத்திய தொல்லியல் துறையாலும் நான்காம் கட்ட அகழாய்வில் இருந்து தமிழக தொழில்துறை பொறுப்பெடுத்து செய்து வருகிறது தற்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் இரண்டாம் வாரத்தில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனால் போதுமான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாக சங்ககால கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்ட இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டன அதற்குப் பிறகு மீண்டும் மிக நீளமான செங்கல் சுவர் ஆய்வில் வெளிப்பட்டன மேலும் சற்று ஏறக்குறைய இரண்டு மீட்டர் ஆழமுள்ள உறைகிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது

இதற்கிடையே சின்னஞ் சிறு அளவிலான எலும்புத் துண்டுகள் கிடைத்தன இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து ஆய்வாளர்களிடம் கேட்டபோது கோடியில் வாழ்ந்த மக்கள் செல்லப்பிராணிகளை வளர்த்திருக்கலாம் அல்லது அவர்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளின் எலும்புகளாகவும் இருக்கலாம் இதனை உயிரியல் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களே உறுதிப்படுத்த படுத்த இயலும் என்றனர்

வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

ஏராளமான பானை ஓடுகள் தற்போது கிடைத்துள்ளன இவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதற்குப் பிறகு அதில் உள்ள தகவல்கள் குறித்து தமிழகத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.