ETV Bharat / state

மருதுசகோதரர்கள் குருபூஜை விழா - கருணாஸ் மரியாதை - karunas pays tribute to maruthupandiyar brothers

மருதுசகோதரர்களின் 220 ஆவது ஆண்டு குருபூஜை விழாவில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மருதுசகோதரர்கள் குருபூஜை விழா
மருதுசகோதரர்கள் குருபூஜை விழா
author img

By

Published : Oct 27, 2021, 5:55 PM IST

சிவகங்கை: காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுசகோதரர்களின் 220 ஆவது குருபூஜை விழா இன்று (அக்.27) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் விழாவில் கலந்து கொண்டு மருதுசகோதரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், " சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்தது அதனை மாற்றியமைத்து அனைத்து சமூகத்திற்குமான அரசாக செயல்பட வேண்டும். பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என கூறியது, அதை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

சசிகலா பயணம் குறித்த கேள்விக்கு அவர் சிறையில் இருந்து வரும்போதே அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார் என்றார். திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன், பின்னர் அது குறித்து விமர்சனம் செய்வேன்.

கருணாஸ் பேட்டி

சட்டப்பேரவையில் எதிர்கட்சியாக அதிமுகவின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவை பொதுவாகவே ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது. மக்கள் வரிபணத்தில் திட்டங்களை செயல்படுத்திவிட்டு தாங்கள் செய்தோம் என்று புராணம் பாடும் மன்றமாக செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.