ETV Bharat / state

மோடி இருக்கும்வரை பெட்ரோல் விலை குறையாது - கார்த்தி சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்

மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும்வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : Oct 18, 2021, 9:28 AM IST

சிவகங்கை: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அரசியல் கொள்கையை முன்நிறுத்தி வர வேண்டும். மேலும், பாரம்பரிய கட்சியான அதிமுக தற்போது ஆளுமைத் திறமையுள்ள தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் தற்போது தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள், சரித்திர விபத்தில் பதவிக்கு வந்தவர்கள்.

பாமக கட்சியை விமர்சித்த கார்த்தி

அதிமுகவிற்குத் தலைமை ஏற்க சசிகலாவிற்கு வாய்ப்பிருக்கிறது. அதனைத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொதுச் சிந்தனை இல்லாமல் ஒரு சமுதாயத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கும் பாமக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது.

எல்லைப் பாதுகாப்புப் படையை மாநில எல்லைக்குள் விரிவுபடுத்தி, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளை பாஜக பறித்துக்கொண்டிருக்கிறது. மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும்வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது” என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சரை எளிய மக்கள் முதல் அலுவலர்கள் வரை எளிதில் சந்திக்கலாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.