ETV Bharat / state

மாரியம்மனுக்கு வெயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்... பாதத்தில் நீர் ஊற்றி வெப்பம் தணித்த இஸ்லாமியர்கள்... இது தான் தமிழ்நாடு! - காரைக்குடி முத்து மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்துச் சென்றபோது, வெயிலின் தாக்கத்தை குறைக்க அப்பகுதி இஸ்லாமியர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றி வெப்பம் தணித்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்குடம் எடுத்த பக்தர்கள்
பால்குடம் எடுத்த பக்தர்கள்
author img

By

Published : Mar 14, 2022, 7:34 PM IST

சிவகங்கை: காரைக்குடி, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அந்தவகையில் இந்தாண்டு மாசி-பங்குனி திருவிழா கடந்த மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒருபகுதியாக நேற்று (மார்ச் 13) முத்தாலம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி அம்மன் சந்நிதி, கல்லுகட்டி வீதி, செக்காலை ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயில் வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

அப்போது, செக்காலை ரோடு வழியாக பக்தர்கள் சென்றபோது, வெயிலின் தாக்கத்தைக் குறைக்க அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் சாலையில் நீர் ஊற்றி இஸ்லாமியர்கள் வெப்பம் தணித்தனர்.

இந்நிகழ்வு தமிழ்நாட்டில் மதச்சார்பின்மைக்கு ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் உதாரணமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் இந்து - இஸ்லாமியர்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய்மாமனின் தத்ரூப சிலை... காதணி விழாவில் கண்கலங்கிய உறவுகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.