ETV Bharat / state

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் அலை; பிரான்ஸ் இளம்பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி இளைஞர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காரைக்குடியைச் சேர்ந்த கலைராஜன் காதல் திருமணம் செய்துள்ளார். கடல் கடந்த இந்த காதல் திருமணம் சிவகங்கை மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் அலை; பிரான்ஸ் இளம்பெண்ணை கைப்பிடித்த காரைக்குடி இளைஞர்

author img

By

Published : Sep 6, 2022, 12:42 PM IST

சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மாணிக்கவள்ளி தம்பதியினர். தங்கராஜ் குடும்பத்துடன் பிரான்சில் வசித்து பணிபுரிந்துள்ளார். இவர்களது மகன் கலைராஜன் பிரான்சில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். பிரான்சை சேர்ந்த ஜான்லுயிக் - வெரோணிக் தம்பதியின் மகள் கயல் அதே கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்துள்ளார்.

கலைராஜனுக்கும் பிரான்ஸ் பெண் கயலும் நண்பர்களாக பழகி பின் அது காதலாக மலர்ந்தது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்களுக்கு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் பிரான்ஸ் பெண் கயலின் தாய், சகோதரி, கலைராஜனின் உறவினர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் அலை; பிரான்ஸ் இளம்பெண்ணை கைப்பிடித்த காரைக்குடி இளைஞர்

இதுகுறித்து மணமகள் கூறியதாவது,”கல்லூரியில் இருந்து 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன், இந்தியாவில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சந்தோஷமாக உள்ளது, தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் எனக்கு மிகவும் பிடித்தமானது" என்றார்.

மணமகன் கூறியதாவது,”எனது 8 வயதில் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்று அங்கு வசித்து வந்தோம். கல்லூரியில் இருந்து நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். அவருக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். எனவே இந்தியா வந்து தமிழ் முறைப்படி முதலில் திருமணம் செய்துள்ளோம். பின் பிரெஞ்ச் முறையில் திருமணம் செய்ய வேண்டும். என்னை பார்க்கும் முன்பே அவருக்கு இந்தியா மிகவும் பிடிக்கும்”என்றார்.

தேசம் விட்டு தேசம் பழகிய காதலர்களுக்கு நாடுகளின் எல்லை கோடுகள் ஒருபோதும் தடை இல்லை, காதலுக்கு எந்த கண்டமும் இல்லை என்பதை இந்த திருமணம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க: என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்...புதிய நிர்வாகிகளை நியமித்து பொதுக்குழு நடத்த திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.