சிவகங்கை: சிவகங்கை யூனியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிபவர் மகேஷ்பாபு, இவர் தமிழ்நாடு வங்கிகள் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவராக உள்ளார். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது வங்கிகளில் கூடுதலாக நகை மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க வங்கிகள் வலியுறுத்துவதாகவும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனிநபராக நூதன முறையில் போராட்டம் நடத்திட அரை நிர்வாணத்துடன் வாக்களிக்க வந்தார்.
அப்போது வட்டாட்சியர் மைலாவதி, காவல் துறையினர் தடுத்து நிறுத்திக் கண்டித்தனர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அலுவலர்கள் சமரசம் செய்துவைத்து வாக்களிக்க அனுமதித்தனர்.
இதையும் படிங்க:விரலில் வைக்கின்ற அடையாள மை அழிவதாக வாக்காளர் குற்றச்சாட்டு!