சிவகங்கை: சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், 38 துறைசார்ந்த தலைமை அலுவலகம் எனப் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த அலுவலகங்கள் அனைத்திற்கும் அரசு சார்பில் அனுப்பப்படும் முக்கிய அஞ்சல்கள் அனைத்தும் சிவகங்கை போஸ் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.
மேலும், இந்த அஞ்சலகத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் கையாளப்படுகின்றன. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை எனப் பல்வேறு பணப்பரிமாற்றங்களும் நடைபெற்றுவருகின்றன.
தற்போது தலைமை அஞ்சலகப் பணிகள் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பணிகள் எதும் நடைபெறாமல் முடங்கியுள்ளன. பணம் அனுப்ப வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இணைய சேவையை விரைந்து சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி... நீட் தேர்வை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை - வானதி சீனிவாசன்