ETV Bharat / state

தமிழ்நாட்டை புறக்கணிக்க முடியாது - கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : May 29, 2019, 3:56 PM IST

சிவகங்கை: இந்திய அரசாங்கத்தால் தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் மற்றும் நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

காவிரி - குண்டாறு திட்டம் சாத்தியமான ஒன்றுதான். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும். இந்த திட்டம் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயனளிக்கும் என்பதால் மத்திய அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். மேலும் மக்கள் விரும்பாத திட்டங்களை ஒருபோதும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. அதேபோல் இந்திய அரசாங்கத்தால் ஒருபோதும் தமிழகத்தை புறக்கணிக்க முடியாது என்றார்.

சிவகங்கை    ஆனந்த்
மே.29

இந்திய அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிக்க முடியாது - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: இந்திய அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிக்க முடியாது புறக்கணிக்கவும் கூடாது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் இன்று சிவகங்கையில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கூறியதாவது;

காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் மற்றும் நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றார். 

மேலும் காவிரி குண்டாறு திட்டம் சாத்தியமான ஒன்று. அதற்கான திட்டங்கள் உண்டு. இதற்கு ரூ.9000 கோடி தேவை. திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பயனளிக்க கூடிய ஒன்று. இந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று நான் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய, மாநில அரசுகளை முறையிட்டு அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

எதிர்க்கட்சி என்பதே கிடையாது. இந்தியாவில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றுதான் பார்க்க வேண்டும், கட்சி ரீதியாக அல்ல. அரசாங்கம் ஒரு கட்சிரீதியான அரசாங்கமாக இருந்தாலும் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக சேவை செய்ய வேண்டும்.

மக்கள் விரும்பாத தொழிற்சாலைகளை கொண்டு வர கூடாது. மக்களின் விருப்பத்திற்கு இணங்கி போகத்தான் வேண்டும். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பதில் கட்சியில் இருக்கும் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். அவர் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று கூறினார்.

மேலும் இந்திய அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிக்க முடியாது புறக்கணிக்கவும் கூடாது. அரசாங்கத்திற்கு கட்சி கிடையாது என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.