சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே செம்புலியான்பட்டினம் ஊரைச் சேர்ந்த அமமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கண்ணன் என்பவரது வீட்டில் 3 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், செம்புலியான்பட்டியில் உள்ள வீடு தோப்புகளிலும், கீழப்பூங்குடியிலுள்ள அவரது மொபைல் கடையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எந்த ஆவணங்களும், பணமோ கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கண்ணன் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ஆய்வு நடக்கிறது. கூடவே, தேர்தல் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் உடன் வந்துள்ளனர். இதுவரை இந்த சோதனையில் எதுவும் பிடிக்கப்படவில்லை. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், என்றார்.