ETV Bharat / state

விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - அமைச்சர் பெரியசாமி

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 என்பது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தமிழ்நாடு முதலமைச்சர் தக்க தருணத்தில் அறிவிப்பார் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டி
அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டி
author img

By

Published : Nov 21, 2022, 11:00 PM IST

சிவகங்கை: திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை வார விழாவில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 என்பது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இந்தியாவில் முதலமைச்சர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தக்க தருணத்தில் அறிவிப்பார். தேர்தலைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாளைக்கு வைத்தாலும் வெற்றி பெறுவோம்.

கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். முதலமைச்சரை மக்கள் விரும்புகின்றனர். நம்புகின்றனர். இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழ்நாடு தான். கூட்டுறவுத்துறையின் முன்னோடி தமிழ்நாடு தான்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஆட்சி காலமாக இருந்தாலும், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிகாலமாக இருந்தாலும் இந்தியாவிற்கு முன்னோடித் திட்டங்களை அறிவிக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டி

இதேபோன்று கடந்த காலங்களிலும் நமது முன்னோர்கள் கூட்டுறவுத்துறையின் சங்கங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்துள்ளனர். பல விதமான திட்டங்களை தமிழ்நாட்டில் உருவாக்கி இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர், நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: பசி பட்டினி இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.