சிவகங்கை: புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த், பிரதீபா என்கிற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் பிரதீபா உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பிரதீபா உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து மன விரக்தியிலிருந்த பிரசாந்த் சிவகங்கையில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த பெண்ணைத் தூக்கிய பெற்றோர் - சினிமா காட்சிகளை மிஞ்சும் வீடியோ