சிவகங்கை: காரைக்குடி ஐந்து விளக்கு அருகே பாஜக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கருவியை கொண்டு மீன்பிடிப்பதால் தான் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்கிறோம் என்று இலங்கை அரசு கூறுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்களை மத்திய அரசு எப்படியும் வெளியே கொண்டு வந்து விடும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆட்சி, ஆளுமை தன்மை மற்றும் அதன் திறமைதான், உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு மருத்துவ மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்தது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு செய்ததை, தங்கள் அரசு செய்ததாக காட்டிக் கொள்வது தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடைய பழக்கம் என்றும், 2026 வரை பதவியில் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மு.க ஸ்டாலின் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை! ஏமாற்றத்தில் மீனவர்கள்...