ETV Bharat / state

ஸ்டாலின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு - ஹெச்.ராஜா!

சிவகங்கை: அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என்று சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 15, 2019, 8:20 AM IST

58 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியீடு

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதிக்கு என 58 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும், பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், 150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை, நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டங்கள், காரைக்குடி - திருப்பத்தூர் - மதுரை புதிய ரயில்பாதை அமைக்கப்படும், சாலை திட்டங்கள் உள்ளிட்ட 58 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஹெச்.ராஜா, "ப.சிதம்பரம் அவரது மகனை போலவே பேசி வருகிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அரை அமைச்சர் என்று ப.சிதம்பரம் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக - காங். கூட்டணியில் அமைந்த மத்திய அமைச்சர்களை விட கூடுதலாக தமிழக அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா

வருமான வரி சோதனை குறித்து அடிப்படை தெரிந்த ப.சிதம்பரம் மக்களை திசை திருப்புவதற்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அது அவருக்கு கை வந்த கலை. கைது செய்ய வேண்டாம் என்று அடிக்கடி நீதிமன்றம் சென்று வந்ததால் கார்த்தி சிதம்பரம் குழப்பத்தில் உள்ளார்" என்றார்.

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி வாக்கு வங்கியுள்ள மெகா கூட்டணி என்றும், இக்கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை   ஆனந்த்
ஏப்ரல்.15

ஸ்டாலின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு - ஹெச்.ராஜா

சிவகங்கை: அதிமுக - பாஜக கூட்டணி வாக்கு வங்கியுள்ள மெகா கூட்டணி என்றும் இக்கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என்றும் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதிக்கு என 58 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும், பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை, நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டங்கள், காரைக்குடி - திருப்பத்தூர்- மதுரை புதிய ரயில்பாதை அமைக்கப்படும், சாலை திட்டங்கள் உள்ளிட்ட 58 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஹெச்.ராஜா கூறியதாவது

ப.சிதம்பரம் அவரது மகனை போலவே பேசி வருகிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அரை அமைச்சர் என்று ப.சிதம்பரம் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக - காங். கூட்டணியில் அமைந்த மத்திய அமைச்சர்களை விட கூடுதலாக தமிழக அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

வருமான வரி சோதனை குறித்து அடிப்படை தெரிந்த ப.சிதம்பரம் மக்களை திசை திருப்புவதற்காக பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். பொய் குற்றச்சாட்டு கூறுவது அவருக்கு கைவந்தகலை. கைது செய்ய வேண்டாம் என்று அடிக்கடி நீதிமன்றம் சென்றுவந்ததால் கார்த்தி சிதம்பரம் குழப்பத்தில் உள்ளார். 

அம்பேத்கரை எதிர்த்தவர்கள் காங்கிரஸ். அம்பேத்கரை பற்றி பேச எங்களைத்தவிர யாருக்கும் அருகதை இல்லை. காங்கிரஸ் கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை. 

அதிமுக கூட்டணி வியாபார கூட்டணி என்று ஸ்டாலின் கூறியதற்கு, அதிமுக - பாஜக கூட்டணி வாக்கு வங்கியுள்ள மெகா கூட்டணி. இக்கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.