ETV Bharat / state

வழக்கு நிலுவையில் உள்ள நபருக்கு என்ஓசி வழங்கி மோசடி? - தலைமை காவலர் கைது! - NOC CERTIFICATE

வழக்கு நிலுவையில் உள்ள நபருக்கு என்ஓசி வழங்கியதாக ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவலர்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவலர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 10:49 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதியினுள் செல்ல நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இதற்காக தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் (என்ஓசி) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மீது வழக்கு உள்ள நிலையில், ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கி இருந்தனர்.

இதனை, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் குற்றப்பிரிவினர் கண்டறிந்து, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரா.ராஜாராம் புகார் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், நெய்வேலி டிஎஸ்பி., சபியுல்லாவை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஊ.மங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுதாகரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெய்வேலி டிஎஸ்பி., சபியுல்லா விசாரணைக்கு அழைத்திருந்தார். அப்போது, விசாரணைக்கு வந்திருந்த தலைமைக் காவலர் சுதாகர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு விட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இல்லாமல் பட்டமளிப்பு விழாவா? பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கியது தொடர்பாக தலைமைக் காவலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இதற்கு உடைந்தயாக இருந்த எழுத்தர் ஜோசப், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக தனிப்பிரிவு காவலர் சங்குபாலன் ஆகிய இருவரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.