ETV Bharat / state

சனாதனம் குறித்து பேசியவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு - ஹெச்.ராஜா

sanathanam issue: சனாதனம் குறித்து பேசியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 8:00 PM IST

Updated : Sep 6, 2023, 9:46 PM IST

ஹெச்.ராஜா

சிவகங்கை: அரண்மனை வாசல் முன்பு பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியினை முறையாகப் பயன்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் எஸ்.சி மக்களுக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு அரசிற்கு 16 ஆயிரத்து 442 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் வெறுமென 5976 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்ததுடன் திமுக அரசு எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையில் 10 ஆயிரத்து 466 கோடியை வேறு திட்டங்களுக்குச் செலவு செய்திருக்கலாம் அல்லது செலவு செய்யாமல் இருக்கலாம்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. சனாதனம் குறித்துப் பேசியதற்குக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதனம் குறித்துப் பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கவிஞர் வைரமுத்து உதயநிதி பேசியதற்குத் திருக்குறளை மேற்கொள் காட்டி பேசியுள்ளார்.

வைரமுத்து பேசியது பற்றி ஹெ.ராஜாவிடம் கேட்டதற்கு, திருக்குறள் குறித்து முழுமையாக அறியாமல் பேசியுள்ளார் என்றும், கவிஞர் வைரமுத்து அதிகமாக பேசாமலிருந்தால் மானமாவது மிச்சமிருக்கும். அதிகம் பேசினால் மானம் போய்விடும் என்றும் பேசினார்.

சாமியாரின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, அமைச்சர் உதயநிதியின் படம் உ.பி. சாமியாருக்கு எப்படி கிடைத்தது. இந்த குற்றச்சாட்டை உருவாக்குவதற்காகவே பொய்யாக இந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் என்றார். டி.ஆர்.பாலுவின் கருத்து குறித்த கேள்விக்கு ’பாரதம்’ என்பதே இந்தியாவின் பெயர். இந்தியா என்கிற பெயர் வெள்ளையர்கள் வைத்ததே.

பாரதம் என பெயர் மாற்றுவதில் எந்த சிக்கல்களும் இல்லை. டி.ஆர்.பாலுவிற்குக் கருப்புப் பணத்தை மாற்றுவதில் தான் சிக்கல் உள்ளது என்று கூறினார். அமைச்சர் உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கவுள்ளோம். சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தானே சென்று புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்லூரிகளில் சாதிப்பிரிவினை ஊக்கப்படுத்தியதாக 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம் - கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி!

Last Updated : Sep 6, 2023, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.