சிவகங்கையில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், அதிமுக, பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது வெற்று காகிதம். நிதி ஆதாரத்தையும் சிந்தித்து தயாரிக்கவில்லை. மக்கள் விழிப்புணர்வாக இருப்பதால் அதில் கவனம் செலுத்த தேவையில்லை. காவேரி-குண்டாறு இணைப்பு திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்போடு கண்டிப்பாக செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த மெகா கூட்டணிதான் வெற்றி பெறும்", என்று தெரிவித்தார்.