ETV Bharat / state

’மோடி பிறந்தநாளை சமூகநீதி நாளாக ஏற்றுக் கொள்கிறோம்...’ - ஹெச்.ராஜா - tamilnadu new governor

புதிய ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சரே வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேவையில்லாமல் அலறுகிறார் என்றும், மோடி பிறந்தநாளை சமூக நீதி நாளாக ஏற்கிறோம் எனவும் பாஜக தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச் ராஜா, h raja, h raja about new tamilnadu governor
ஹெச் ராஜா
author img

By

Published : Sep 12, 2021, 8:13 AM IST

சிவகங்கை: காரைக்குடியில் பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது இல்லத்தில் ஆறு அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சமுதாய ஒற்றுமைக்காக ஊர்வலம் சென்று கரைப்பது வழக்கம்.

பக்ரித் பண்டிகைக்கு ஒரு நியமா?

தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாகக் கூறி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது. ஆனால், பக்ரித் பண்டிகையின்போது வீதிகளில் தொழுகைக்கு அனுமதி அளித்தனர். இது எந்த விதத்தில் நியாயம்?

ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

ஒன்றிய அரசு வழிகாட்டுதலை எல்லா மதத்துக்கும் பின்பற்றினால் அது நேர்மையான அரசு. கரூரில் ஒரு காவல் அலுவலர் விநாயகர் சிலையை உடைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலை செய்யும் இடங்களில் பூட்டு போடப்பட்டுள்ளது.

காவலர்கள் அராஜகம்

காவல் துறையினர் விநாயகர் சிலையைத் திருடலாமா? நாட்டுக்கு காவல் அளிக்கும் காவலர்களே விநாயகர் சிலையை திருடுவது அராஜாகத்தின் உச்சகட்டம். இதனால், காவல்துறைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அராஜகத்தில் ஈடுப்பட்டவர்கள் திகவா, விசிகவா, கம்யூனிஸ்டா? எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தாக வேண்டும். நாட்டுக்கு எதிராக இவர்கள் செயல்பட மாட்டார்கள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்?

பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராக இந்து மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பல காவல் அலுவலர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கதக்கது. அவர்களை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

மோடி பிறந்தநாளே சமூகநீதி நாள்!

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 'சமூகநீதி நாள்' என்பதை ஏற்றுகொள்கிறேன். நாடு சுந்திரமடைந்து 68 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிற்பட்ட சமுதாயத்தின் எதிரிகள்.

இந்திய மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடி பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

’ஆளுநர் மாற்றத்துக்கு அலறும் காங்கிரஸ்’

ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் சிறப்பாக செயல்பட்டார். தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் 1976ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அலுவலராக பொறுப்பேற்றவர். உளவுத்துறையில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்.

புதிய ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்தி வரவேற்றுள்ளார். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆளுநர் மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அலறுகிறார். ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேலை இவர் ஏதேனும் கல்லூரியில் ஊழல் செய்திருப்பாரோ? ஆளுநர் மாற்றத்தால் அவருக்கு எங்கோ நெறி கட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க: குஜராத் அடுத்த முதலமைச்சர் யார் - கவனமாக காய் நகர்த்தும் பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.