சிவகங்கை மாவட்டம் மதுரை முக்குப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் அரசு அமைக்கும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன் பண மதிப்பிழப்பு செய்வேன் என்று சொல்லியிருந்தால் மக்கள் மோடியை அன்றே விரட்டி அடித்திருப்பார்கள். மோடி ஒரு சர்வாதிகாரி. எங்கள் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து. மருத்துவ கனவில் இருந்த மாணவி அனிதா இறப்பிற்கு மத்திய அரசின் நீட் தேர்வுதான் காரணம்.
பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கும் என சர்வாதிகாரமாய் சொல்கிறார். உண்மையான கூட்டாட்சி தத்துவமே அனைத்து மாநிலங்களும் மத்திய அரசில் இடம் பெற வேண்டும் என்பதுதான். இபிஎஸ், ஓபிஎஸ் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. தேர்தல் முடிவு வந்தவுடன் இபிஎஸ் ஆட்சிக் கவிழும். ஜனநாயக ஆட்சி வேண்டுமானால் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். சர்வாதிகார ஆட்சி வேண்டும் என்றால் வேறு கட்சிக்கு வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே வரி என்ற எளிமையான வரியை விதிப்போம் என்று பேசி பரப்புரையை நிறைவு செய்தார்.