சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பூலாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில், பிரியதர்ஷினி தம்பதி. இவர்களை சென்ற 20 நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக, பிரகாஷ் என்பவரது குடும்பத்தினர் நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் செந்திலின் கை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த தாக்குதல் குறித்து செந்தில் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் பிரகாஷ் குடும்பத்தினரின் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) பூலாங்குறிச்சியில் வசித்து வரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆ. செல்வம் தலைமையில் செந்திலின் குடும்பத்தினர் பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு காவல் துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காவல் ஆய்வாளர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில் முன்னாள் நீதிபதி போராட்டத்தை கைவிட்டார். சிவகங்கையில் காவல் நிலையம் முன்பு முன்னாள் நீதிபதி போராடியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!