சிவகங்கை: மாளவியார் தெருவில் வசித்து வருபவர் நாகேஸ்வரி. நேற்று (பிப்ரவர் 9), நாகேஸ்வரி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலி வீட்டில் காணாமல் போனது. வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் நகை கிடைக்கவில்லை.
பின்னர் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை கொடுத்தது நினைவுக்கு வந்தது. நகை குப்பைக்கு சென்றிருக்குமோ என்று சந்தேகம் தோன்றியது.
![missing gold chain gold chain missing in sivagangai missing chain given to owner by cleaning worker cleaning worker hand over chain to owner குப்பைக்கு போன ஐந்தரை பவுன் தங்கநகை சிவகங்கையில் குப்பைக்கு போன தங்க நகை குப்பையிலிருந்து தங்க நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14436867_gold.png)
இதையடுத்து உடனடியாக, துப்புரவு பணியாளர்கள் ஆறுமுகம் ஜெயந்தியிடம் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் சேகரித்த குப்பையை கொட்டிய இடத்தில் மூன்று மணி நேரம் தேடி தங்க சங்கிலியை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நகை நாகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பத்திரமாக மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு, குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் அரியவகை அணில் குரங்குகள் திருட்டு