ETV Bharat / state

ஏரியூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா - சிவகங்கை அருகே ஏரியூர் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா

சிவகங்கை அருகே ஏரியூர் பெரிய கண்மாயில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாதி மத வேறுபாடின்றி மீன்பிடித்தனர்.

மீன்பிடித் திருவிழா
மீன்பிடித் திருவிழா
author img

By

Published : May 11, 2022, 7:50 PM IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஏரியூர் பெரிய கண்மாயில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்து துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடி விழா தொடங்கியது. இதனையடுத்து, அப்பகுதி கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடிய மீன்களை உற்சாகமாக மீன்பிடிக்கத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நிறைந்திருந்திருந்த கண்மாயின் மூலம் பாசன வசதிபெரும் விளைநிலங்கள் அனைத்தும் நன்றாக விளைந்து அறுவடை முடிந்த நிலையில் கண்மாயில் தண்ணீர் குறைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கிராமத்து மீன்பிடி உபகரணங்களான கச்சா, கொசு வலை, மற்றும் வேட்டி, சேலைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் சாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சாகளைக் கொண்டு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, விரால் வகை மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

ஊர்க் கூடி உற்சாகத்துடன் நடந்த மீன்பிடித் திருவிழா

இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மனித முகம் கொண்ட மீன்... இதன் விஷம் மனிதனையே கொன்றுவிடுமாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.