சிவகங்கை: மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - செல்வி தம்பதி. இவர்களின் மகள் விரேஸ்மா, தனது சிறு வயது முதலே ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றைப் பாசமாக மிகுந்த அக்கறையுடன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இவற்றில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சண்டை கிடா ஆகியவை காலப்போக்கில் இறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (டிச.11) விரேஸ்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை மணமேடையில் ஏற்றி, திருமண போட்டோ எடுத்துள்ளனர்.
மேலும் விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தனது தங்கைக்குக் கன்னி நாய்கள் மற்றும் சண்டை சேவல்களைச் சீதனமாக வழங்கி தங்கையின் ஆசைகளை நிறைவேற்றி உள்ளார். இந்த நிகழ்வு திருமணத்தில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காளை, யானை ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம்!