ETV Bharat / state

'நாங்கள் ஆதிதிராவிடர் இல்லை; தேவேந்திரகுல வேளாளர்' - பெயர் மாற்றம் தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு

author img

By

Published : May 2, 2022, 5:31 PM IST

ராமநாதபுரத்தில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் காலனி எனப் பெயர் வாசிக்கப்பட்டதைத்தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர், ’அது தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக’ சுட்டிக்காட்டி கூச்சலிட்டனர்.

பெயர் மாற்றம் தொடர்பாக கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

ராமநாதபுரம்: கடலாடி அருகேயுள்ள காவாகுளம் கிராமத்தில் இன்று (மே 02) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். கிராம சபைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊராட்சியின் செயலர் செலவினங்களை வாசித்தார்.

அப்போது, ’ஆதிதிராவிடர் காலனி செலவிடப்பட்ட தொகை’ என வாசித்தார். உடனே கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், ’தேவேந்திரகுல வேளாளர் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆதிதிராவிடர் காலனி என எப்படி சொல்லலாம்’ என அமைச்சருக்கு முன்பாக கூச்சலிடத் தொடங்கினர். இதனால், கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பெயர் மாற்றம் தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு

பின்னர், அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், காவல் துறையினர் ஆகியோர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டைக் கூடிய விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றிவிடுவார்கள்' - ஜெயக்குமார் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.