சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை துரத்தியதால் தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து அது அடிபட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு ஊர்மக்கள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பிவைத்தனர். தண்ணீர், உணவுத் தேடி காட்டுக்குள் இருந்து வன விலங்குகள் வருவதாலும், அவைகள் பயிர்களை மேய்ந்து நாசம் செய்துவிடுவதாலும் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.அடிபட்ட புள்ளிமான் மீட்பு எனவே அரசும் வனத்துறை அலுவலர்களும் வன விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.