ETV Bharat / state

பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை - வாடிக்கையாளர் அதிர்ச்சி! - அணில் சேமியா

Frog in Semiya pocket: பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் இறந்து நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் இருந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:46 AM IST

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் இருந்து வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் தீபாவளிக்காக உணவு தயாரிப்பதற்காக, தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள மளிகை கடையில் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்த சேமியா பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்தபோது, அந்த பாக்கெட்டிற்குள் இறந்து நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: துக்க வீட்டில் நடந்த சோகம்; ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

அதற்கு, “பிரபல கம்பெனி பேக்கிங் செய்து கொடுத்த சேமியாவைத்தான் வாங்கி விற்பனை செய்தேன். பிரபல கம்பெனி என்பதால் நம்பிக்கையுடன் வாங்கி விற்பனை செய்தது தவறுதான்” என கடைக்காரர் கூறியுள்ளார். எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ரோஸ் மில்க் கொடுக்க தாமதம்.. கடை ஊழியர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கும்பல்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.