ETV Bharat / state

சர்ச்சை பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு - sivagankai

சிவகங்கை: தங்களது சமூக பெண்கள் குறித்து இழிவாக பேசி சமுக வலைதளத்தில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்ட அந்த சமூக அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முத்திரையர் இன மக்கள் சிவகங்கை ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
author img

By

Published : Apr 22, 2019, 7:59 PM IST

ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாகப் பேசி காணொளி ஒன்றை சமுகவலைதளத்தில் மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்தனர். இது வைரலாகி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூக பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இழிவாக பேசி இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

சிவகங்கை ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

சிவகங்கை  ஆனந்த்
ஏப்ரல்.22

சமூகவலைதளங்களில் சமுதாய பெண்கள் பற்றி இழிவாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து இழிவாக சமூகவலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முத்தரையர் சங்கம்  சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஒரு சமூக பெண்களை இழிவாக சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வீடியோ வெளியிட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அச்சமூக மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் சமூக பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துச் சென்றனர். 

மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தங்கள் சமுதாய மக்களை ஒன்றிணைத்து மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.