சிவகங்கை: சிவகங்கைப் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் தலைமையில், திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், இவ்வாறு செய்ய இயலாத ஒன்றிய அரசு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட குரல்களை எழுப்பினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய தொழிலாளர் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் , மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்