ETV Bharat / state

திமுக அரசை அண்ணாமலை விரைவில் வாழ்த்துவார் - அமைச்சர் பெரியகருப்பன்

author img

By

Published : May 31, 2022, 11:44 AM IST

திமுக அரசை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் வாழ்த்துவார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

மருத்துவ முகாம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரோ அமைச்சர்களோ செயல்பட தேவையில்லை. மக்களுடைய தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மக்கள் பாராட்டினால் அதுதான் நல்ல ஒரு அரசுக்கு அடையாளம். ஆகவே நல்ல அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலையே வாழ்த்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிசு மரணம் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கில் முதலமைச்சர் உள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.