சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்; அமமுக ஒன்றியச் செயலாளர். இவர் இன்று அதிகாலை சிவகங்கை பைபாஸ் சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட அமமுக சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.