சிவகங்கை: சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நரிக்குறவ இனமக்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாகச் சேர்ந்து வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், தங்களை எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பட்டியலிலிருந்து நீக்கி பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கைவைத்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
நரிக்குறவ இன மக்களுக்கு அதிமுக எம்எல்ஏ ஆதரவு
அப்போது அவ்வழியாக வந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்நாதன் தனது காரை நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இதை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்...! - நூற்றாண்டைக் கடந்து நிற்கும் 'ஜெய்பீம்'