சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் 2002ஆம் ஆண்டில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் இராணி ஆரோண். இவரிடம் அதே ஊரை சேர்ந்த கணபதி என்பவர் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு ஊராட்சி தலைவர் லஞ்சமாக ரூ.300 கேட்டுள்ளார். அதன்பின், இது குறித்து கணபதி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அப்போது இராணி ஆரோண் பணத்தை பெறும் போது கையும் களவுமாக போலீசாரிடம் பிடிப்பட்டார்.
இவ்வழக்கானது, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இராணி ஆரோணுக்கு 4 ஆண்டுகள் சிறையும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி இன்ப கார்த்திக் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: மோசடி புகார்: வழக்கை ரத்து செய்யக் கோரிய செந்தில்பாலாஜி மனு மீது அக்.31 தீர்ப்பு