சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் தனது நண்பர் அருண் குமாருடன் கடந்த 25ஆம் தேதி பழனிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது காளிகவுண்டம்பாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அஜித்குமார் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித்குமார் இன்று (ஜூலை 30) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடல் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர் வினோத், கார் ஓட்டுனர் சதிஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உள்பட நான்கு பேர் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை முந்தி சென்றபோது விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு