ETV Bharat / state

வாகன பறிமுதல்: தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு - விளம்பர பதாகை

சேலத்தில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தைத் திருப்பித்தராமல் காவல்துறையினர் அலைக்கழிப்பதாகக் கூறி, விளம்பரப் பதாகை கம்பிகளில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Aug 3, 2021, 6:39 PM IST

Updated : Aug 3, 2021, 10:48 PM IST

சேலம்: சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவர் தனது உறவினரின் இருசக்கர வாகனத்தில், கன்னங்குறிச்சி வழியாகப் பயணித்துள்ளார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இளைஞரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக இளைஞருக்கு அபராதம் விதித்துள்ளனர். வாகனத்திற்கான முறையான ஆவணங்களும் அவரிடத்தில் இல்லாததால், இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் வாகன ஆவணங்களைக் கொண்டு வந்து சரவணன் சமர்ப்பித்துள்ளார்.

விளம்பர பதாகையில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் தொடர்பான காணொலி

ஆவணங்கள் இல்லாததால் வாகனம் பறிமுதல்

இருப்பினும் வாகனத்தைத் தராமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரவணன், இன்று (ஆக 3) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, விளம்பர பதாகை கம்பியின் உயரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தைத் தராமல் அவமானப்படுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்து விளம்பர பதாகையை விட்டு, சரவணன் இறங்க மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர துணை ஆணையர் வேதரத்தினம், இளைஞரைச் சமாதானப்படுத்தி பத்திரமாகக் கீழே இறங்கச் செய்தார். அதன் பின்னர் இருசக்கர வாகனத்தை இளைஞரிடம் வழங்கிய காவல்துறையினர், தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Last Updated : Aug 3, 2021, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.