ETV Bharat / state

ஏற்காடு அருகே  காட்டெருமை முட்டியதில் இளம்பெண் பலி - ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பட்டிப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காட்டெருமை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்காடு
ஏற்காடு
author img

By

Published : Aug 20, 2022, 7:32 PM IST

சேலம்: சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பட்டிப்பாடி மலைக் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சேகர். இவரது மனைவி தேவி.(37) இவர் ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் தேவி வீடு திரும்பும் பொழுது , பட்டி பாடி நடூர் என்ற இடத்தில் சாலையில் ஓரத்தில் நின்றிருந்த காட்டு எருமை, அப்பெண் வாகனம் மீது மோதி முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஏற்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கன் பிரைடு ரைஸில் கண்ணாடித் துகள் சர்ச்சை ... பேரம் பேசும் வீடியோ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.