தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்துச் சென்றன. இந்த பேரணியானது சங்கர் சுந்தர் லாட்ஜ், அரசு கலைக்கல்லூரி வழியே சென்று அஸ்தம்பட்டி அருகே முடிவடைந்தது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வெல்லமண்டி நடராஜன், தமிழ்நாட்டிலே சேலம் மாவட்டம் சுற்றுலாத்தலத்தில் சிறந்து விளங்கும் முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்டும்.
நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. என்றார். மேலும், நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க நாட்டுக்கும் வந்து சுத்திப் பாருங்க'- சுற்றுலா விசா வழங்க முடிவு செய்த சவூதி!