சேலம் ஜெனிஸ் அறக்கட்டளை சார்பில் தோல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜெனிஸ் எஜூகேஷனல் சார்பில் கல்வி அறக்கட்டளை 18 ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்வுகள், தொழிற்கல்வி, திறன் கல்வி அளித்து பெண்கள் மேம்பாடு அடைய பல்வேறு முகாம்களை நடத்திவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தோல் பொருட்களைக் கொண்டு காலணிகள், தோல் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் சேலம் மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர், தோல் பொருட்கள் கொண்டு பொருட்கள் தயாரித்து, அவற்றை சந்தைப்படுத்துவது குறித்தும் அதனால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவது குறித்தும் விளக்கமாக சிவக்குமார் கருத்துரையாற்றினார்.
இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இதையும் படிங்க: துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்