ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகள் அலட்சியம்; வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து! - tourist negligence

சேலம்: ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் வனப்பகுதிக்குள் மது அருந்திவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை உடைத்தெறிந்து விட்டுச் செல்வதால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wildlife
author img

By

Published : Jul 27, 2019, 10:51 AM IST

சேலம் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு மலைப்பகுதி திகழ்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் சீசன் நேரங்களில் இந்தப் பகுதி எப்போதும் களை கட்டியிருக்கும்.

வனப்பகுதியில் உடைந்த நிலையில் கிடக்கும் பாட்டில்கள்

அப்படி இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வது மட்டுமல்லாமல் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிக்கு உணவு தேடிவரும் வனவிலங்குகள் அவற்றில் சிக்கி காயமடைவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனால் இந்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு மலைப்பகுதி திகழ்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் சீசன் நேரங்களில் இந்தப் பகுதி எப்போதும் களை கட்டியிருக்கும்.

வனப்பகுதியில் உடைந்த நிலையில் கிடக்கும் பாட்டில்கள்

அப்படி இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வது மட்டுமல்லாமல் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிக்கு உணவு தேடிவரும் வனவிலங்குகள் அவற்றில் சிக்கி காயமடைவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனால் இந்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் மது அருந்திவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை உடைத்து எறிந்து விட்டுச் செல்வதால், வன விலங்குகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Body:ஏற்காடு சுற்றுலாத் தளம் சேலம் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தளம். உள்ளூர் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

சேலம் நகரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஏற்காடு சுற்றுலா தளத்தை சென்றடைய முடியும் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ஏற்காடு மலை பாதையின் இருபுறமும் மூங்கில் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளும் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. மேலும் மலை உச்சியில் தனியார் காப்பி தோட்டங்கள் அமைந்துள்ளது கூடுதல் பசுமையை தருகிறது எனலாம்.

ஏற்காடு வனப்பகுதியில் ' இந்தியன் கெளர் ' எனப்படும் காட்டு மாடு வகையும், குரங்கு, நரி செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகளும் மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வகை பாம்பு வகைகளும் 300க்கும் மேற்பட்ட விதவிதமான பறவை இனங்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை ஆங்காங்கே உடைத்துப் போட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன .

இது வன விலங்குகளின் உயிரை பறிக்கும் செயலாக மாறி வருகிறது என்று வன ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை ஒட்டி கருங்காலி வன கிராமத்திற்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் வனத்துறை கண்காணிப்பில் பல நூறு ஏக்கர் காப்புக் காடு அமைந்துள்ளது.

இந்தக் காப்புக்காட்டிற்குள் செல்லும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதியில் அடுப்பு அமைத்து சமையல் செய்து சாப்பிட்டு விட்டு, மது அருந்தி விட்டும் செல்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும், திருட்டுத்தனமாக வனப்பகுதியில் நுழையும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறார்கள் கருங்காலி வன கிராம மக்கள்.

வனப்பகுதியில் மது அருந்தும் நபர்கள் அங்கே யே பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். சாலை ஓரத்திலும் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால் வனவிலங்குகள் காயமடைந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன. வனவிலங்குகள் தான் வனத்தில் செல்வம். அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை முன்வரவேண்டும்.

சட்ட விரோதமாக காட்டில் நுழைந்து மது அருந்தும் நபர்களை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிப்பு செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்காடு ஏரி மற்றும் லேடீஸ் சீட் உள்ளிட்ட வியூ பாயிண்ட் பகுதிகளிலும் மது பாட்டில்கள் அதிகம் வீசப்படுகின்றன. மேலும் மது போதையில் செல்லும் நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.


Conclusion:இது தொடர்பாக பேட்டி அளித்த ஏற்காடு வரலாற்று ஆய்வாளர் இளங்கோ கூறுகையில், " சுற்றுலா பயணிகளை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்த பிறகு தான் ஏற்காடு மலை ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்க வேண்டும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் சுற்றுலா பயணிகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

மேலும் குரங்கு களுக்கு மனிதன் சாப்பிடும் உணவு வகைகளை வழங்கும் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யும் பலகைகள் அமைக்க வேண்டும். மனித உணவுகள் உண்ணும் குரங்குகள் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் குரங்குகளுக்கு உணவு அளிக்கா வண்ணம் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் . அதனால் குரங்குகள் காப்பாற்றப்படும் " என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.