ETV Bharat / state

வ.உ.சி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவதில் அரசியல்வாதிகளின் தலையீடு - salem district news

சேலம்: ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வருகிற வ.உ.சி மார்க்கெட் வணிக வளாகத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு இருப்பதாக வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

salem voc market issue  சேலம் மாவட்டச் செய்திகள்  salem district news  சேலம் வஉசி மார்க்கெட் பிரச்னை
வ.உ.சி மார்க்கெட் வணிக வளாகம் கடைகள் ஒதுக்குவதில் அரசியல்வாதிகளின் தலையீடு
author img

By

Published : Aug 5, 2020, 8:55 PM IST

சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி மார்க்கெட் வணிக வளாகத்தை புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதியதாக அமையவுள்ள மார்க்கெட்டில் ஏற்கனவே கடைகள் வைத்து வணிகம் நடத்திவரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்பட கடையின் பரப்பளவை அமைத்து கட்டித் தரவேண்டும் என்றும் வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகவேல்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயல் தலைவர் சண்முகவேல், சங்கத்திலுள்ள 128 உறுப்பினர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட மூன்று பேரை பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பதாகவும், அவர்களுடன் குத்தகைதாரர்கள், மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதியதாக அமையவுள்ள கடைகளில் சில கடைகளை அரசியல் வாதிகளும், வசதிபடைத்த வணிகர்களும் கூடுதல் கடைகளை கேட்டுவருவதால், தங்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடைகள் கிடைப்பதில் சிக்கல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாநகராட்சியினர் 10 அடி நீளம் 8 அடி அகலத்தில் கடைகள் அமைத்து தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: ஆய்வு செய்ய வந்த நாடாளுமன்ற உறுப்பினரை சுற்றிவளைத்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.