சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். அவர் முன்னாள் மக்களவை உறுப்பினராக இருந்தவர். தற்போது ஜெ. தீபா ஆதரவாளராக அறியப்பட்டவர். இந்த நிலையில் நேற்றிரவு அவர் காரில் ஓமலூர் சென்றுவிட்டு ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரது காரை நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அதையடுத்து அர்ஜுனன் அடையாள அட்டை இல்லை எனவும் தான் முன்னாள் எம்.பி. எனவும் கூறியிருக்கிறார். அதுதொடர்பாக காவலர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறி, காவலர் ஒருவரை அர்ஜுனன் தாக்கினார். பதிலுக்கு காவலரும் தாக்கவே, ஆந்திரமடைந்த எம்.பி. காவலரை காலால் எட்டி உதைத்தார். அதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பினார். அது குறித்து காணொலி பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 'பரிசோதனை செய்ய மாட்டோம்' - மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம்