சேலம் மாநகராட்சி உத்தமசோழபுரத்தின் ஊர் எல்லையில் குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டிருக்கிறது.
இவை போதிய பராமரிப்பு மற்றும் குப்பை லாரி மூலம் சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் மலை போல் குவிந்து காணப்படுகிறது.
மேலும் இப்பொழுது பருவமழை காலத்தில் ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற கொள்ளை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்களிடம் கருத்து கேட்ட பொழுது, “இங்கே குப்பை சுத்தம் செய்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். மேலும் தெரு விளக்குகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உரிய நேரத்தில் எரிவதில்லை” என்றனர்.
இக்குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரு விளக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்கள் விடுக்கும் முதன்மை கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: சாலையில் கிடந்த கரோனா பரிசோதனை குப்பிகள்: தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்!