சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள முத்து மஹாலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.30) நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிட கேட்கும் தொகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்றார்.
-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. pic.twitter.com/VVUSuoFBTL
— Velmurugan.T (@VelmuruganTVK) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. pic.twitter.com/VVUSuoFBTL
— Velmurugan.T (@VelmuruganTVK) December 30, 2023தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. pic.twitter.com/VVUSuoFBTL
— Velmurugan.T (@VelmuruganTVK) December 30, 2023
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனில், சிறப்பு பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும். பாஜக கூட்டணிக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தன்னிச்சையாக அமைப்பைத் துவங்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது போன்று, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி கடலூரில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாக மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்தார். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்!